எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் : பூங்கொத்து கொடுத்து வரவேற்ற இபிஎஸ்!
பிரபல நடிகை காயத்ரி ரகுராம், சினிமாவில் நடனக்கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அந்த சமயத்தில் அரசியலில் நுழைந்த அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு காயத்ரி ரகுராமுக்கும் அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.
பின்னர் அடுத்த நாளே தான் பாஜகவில் நீடிப்பதாக கூறினார். எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்த போது காயத்ரி ரகுராமிற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்குப்பிறகு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு காயத்ரி ரகுராம் ஓரங்கட்டப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த காயத்ரி ரகுராம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். கட்சியில் இணைந்த நாளில் இருந்தே பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். வெளிநாட்டில் சிக்கித்தவித்த பல தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறேன். என்டைய சொந்த செலவில் நான் பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். நான் கடந்த 8 ஆண்டு காலமாக கடன் வாங்கி உதவி செய்திருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்தாக கூறி என்னை என்னை பாஜகவை விட்டு நீக்கியது வருத்தத்தையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சனம் செய்தது வந்தார்.
இந்த நிலையில் திடீரென திருமாவளவனை சந்தித்து வாழ்த்து கூறினார். அவர் வேறு அரசியல் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறியதுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
அண்மையில் திமுகவில் இணைய வாயப்புள்ளதாக கூறப்பட்டது, அதே சமயம் அவர் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்ததகாவும் தகவல் வெளியானது.
ஆனால் காயத்ரி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது அனைத்து ஆரூட தகவலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல அமைந்துள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.