இளைஞர்களை முன்னிறுத்திய மத்திய பட்ஜெட்; அறிவிக்கப்பட்ட அதிரடி திட்டங்கள்; புதுப்பிக்கப்படும் ஷ்ரம் சுவிதா

Author: Sudha
23 July 2024, 2:51 pm

இளைஞர்களுக்கான பல திட்டங்கள் இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1,00,000 வரை சம்பளம் உள்ள வேலையில் சேரும் பணியாளருக்கு, ஒரு மாத ஊதியம் முதல் மாதமே கூடுதலாக வழங்கப்படும் எனவும் இந்த தொகை ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக வழங்கப்படும்”

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, 1.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் பெறுவதை உறுதிப்படுத்த மொத்தம் 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.

அனைத்து அரசுத் துறைகளிலும் முதன்முறையாக பணியாற்ற வரும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். முதன்முறையாக பணியாற்ற வருபவர்களுக்கான ஊக்கத்தொகை நேரடி பயன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும்.

ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை அரசு தொடங்கும்.

ஷ்ரம் சுவிதா மற்றும் சமாதான போர்ட்டல் போன்ற தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான இணையத்தை எளிதாக்கும் வகையில் புதுப்பிக்கப்படும்.

போன்ற இளைஞர்களுக்கான பல திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!