யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா; புதிய தலைவர் அறிவிப்பு: நாளை பதவியேற்பு….!!

Author: Sudha
31 July 2024, 1:20 pm

மத்திய அரசு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவராக மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த upsc தேர்வு முறைகேடு குறித்த சர்ச்சையால் கடந்த 20ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதனை நியமித்து உள்ளார். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1983 ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத் துறை இணைச் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…