அவசர அவசரமாக கூடிய அதிமுக செயற்குழு கூட்டம் : இபிஎஸ் எடுக்கும் முக்கிய முடிவு.. வெளியான தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 11:02 am

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே, கடந்த 9-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, செயற்குழு கூட்டம் அவசரமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றையாக கூட்டத்தில் 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் தராத திமுக அரசை கண்டித்தம் உட்பட 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 303

    0

    1