துணை முதல்வர் உதயநிதி: ஆகஸ்ட் 19 இல் பதவியேற்பா?வாயை விட்டு பிறகு சமாளித்த அமைச்சர்…!!

Author: Sudha
9 August 2024, 4:33 pm

ராமநாதபுரத்தில் நடந்த ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ‘துணை முதல்வர் உதயநிதி’ என கூறிவிட்டு, அடுத்த நொடியே, ‘சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார்; அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது’ எனக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக அமைச்சர்கள் பலரும் விரும்புவதாக சொல்லப்பட்டது.இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை” என பதிலளித்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 19ல் உதயநிதி துணை முதல்வராகிறார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதையடுத்து, அவருக்கு பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

பகுத்தறிவு பேசும் திமுக, பவுர்ணமி தினமான அன்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது கொள்கை முரணாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சுபமுகூர்த்த தினமான டிசம்பர் 14, 2022ல் புதன்கிழமையாக பார்த்து, நல்ல நேரத்தில் (காலை 9:28) உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…