கூட்டணி இல்லாமல் போட்டி; எதற்கும் தயாராக இருங்கள்; உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை;

Author: Sudha
28 July 2024, 3:11 pm

தமிழகத்தில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தி.மு.க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த தி.மு.க தமிழகத்தில் 39 பாண்டிச்சேரியில் 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றது.

சில வாரங்களாக, தமிழக காங்கிரஸ் கட்சியில், அதிகாரம் மற்றும் பதவிக்காக ஏற்பட்டுள்ள சலசலப்பு திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற, இந்தியா கூட்டணி பொறுப்பாளர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ‘’எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்’’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஒன்று அதற்கு மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டாலும், எந்த அரசியல் தேவைகளையும் எதிர்கொள்ள தலைவர்களும், தொண்டர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!