ஒலிம்பிக் போட்டிகள்; இன்று நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல்; சாதிப்பாரா? தமிழக வீராங்கனை?..!!

Author: Sudha
27 July 2024, 9:29 am

பாரிஸில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் உலகமெங்கிலும் உள்ள சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் பெண்கள் பத்து மீட்டர் ஏர் ரைபிள் ஆகியவற்றில் பங்கேற்கிறார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

இளவேனில் வாலறிவன் கடலூரைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை.இளவேனில் 2018 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றார்.2019 உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2019 ஆகத்து 28 இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இவருக்கு 2022 இல் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…