காலியானது விக்கிரவாண்டி தொகுதி.. ஜூன் மாதமே இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் கூறிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 1:03 pm

காலியானது விக்கிரவாண்டி தொகுதி.. ஜூன் மாதமே இடைத்தேர்தல்? தேர்தல் ஆணையம் கூறிய தகவல்!

மக்களவை தேர்தல் வேளைகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உடல்நல குறைவால் காலமானார்.

அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எம்எல்ஏ புகழேந்தி மறைவால் , விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவதற்குள் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் ஏதேனும் ஒரு தேர்தல் தேதியில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக கடைசி கட்ட தேர்தல் தேதியான ஜூன் 1ஆம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu