திருக்குறள் பற்றிய அறிவு ஆளுநருக்கு இல்லை… ஜி.யூ போப் திருக்குறளை சரியாக மொழி பெயர்த்திருக்கிறார் : வைகோ கருத்து

Author: Babu Lakshmanan
8 October 2022, 1:27 pm

திருக்குறளை ஜி.யூ. போப் வேறுமுறையில் மொழி பெயர்த்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு, மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோ பதில் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக ஆளுநர் திருக்குறள் பற்றி பேசியதற்கு :- திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது. இந்துத்துவா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என் ரவியும் பேசுகிறார்.

திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது. அவரே கூறியுள்ளார், உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை என்று நோபல் பரிசு பெற்ற அவரே திருக்குறள் குறித்து கூறியிருக்கிறார். ஜி.யூ போப்பும் திருக்குறளை சரியாக மொழி பெயர்த்திருக்கிறார் ஆனால் இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாகும்.

தமிழக அரசு அனுப்பி உள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சி செய்கிறார், எனக் கூறினார்.

அப்போது, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது குறித்த கேள்விக்கு, “அவர்கள் மனம் போன போக்கில் எல்லாம் பேசுகிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,” என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ