பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக ஏற்கனவே சின்மயி உள்ளிட்ட பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இளம் பாடகர்களின் திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதை தடுக்கவே, எனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தற்போது பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய புவனா சேஷன், சுமார் 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களின் 5 பேர் மட்டுமே தைரியமாக தனது பெயரை கூறி வெளிப்படையாக பேசியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் சூழ்நிலையிலிருந்து வெளிவருவது கடினம். தற்போது எனது கதையை பகிர்வதன் நோக்கமே, இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எங்களுக்கு நேர்ந்தது இளம்பாடகர்களுக்கு நேர்வதை நான் விரும்பவில்லை. பாடகி சின்மயியின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது.
சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். வாழ்க்கை அவருக்கு கடினமாக இருந்தது. இது தொடரக்கூடாது. இதனால் பல பெண்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் ஏற்படபோவதில்லை. அரசாங்க அமைப்பு விசாரணயை நடத்த விடாது என கூறியுள்ளார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.