இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் : கவிஞர் வைரமுத்து பிரார்த்தனை!!
Author: Babu Lakshmanan24 August 2022, 12:37 pm
இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் :- மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார், எனக் குறிப்பிட்டுள்ளார்.