டாஸ்மாக்கில் பீர்பாட்டில் அறிமுகம்.. தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடுவதா? குடியுடன் கொண்டாடுவதா? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 8:11 pm

டாஸ்மாக்கில் பீர்பாட்டில்கள் அறிமுகம்.. தீபாவளி குடும்பத்துடன் கொண்டாடுவதா? குடியுடன் கொண்டாடுவதா : வானதி சீனிவாசன் அட்டாக்!!!

தமிழ்நாட்டு அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லெகர் பீர், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் மதுபான கடைகளில் கோடைகாலங்களில்தான் அதிக அளவு பீர்கள் விற்பனையாகும்.

தற்போது தீபாவளியை முன்னிட்டு தண்டர்போல்ட் ஸ்டிராங், காட்பாதர் என்கிற இரு புதிய பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் மேலும் 5 புதிய பீர் வகைகள் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: நாடெங்கும் மக்கள் தீபாவளி கொண்டாட தயாராகி வரும் வேளையில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழக மக்களுக்கு தமிழக அரசின் கொடுத்த தீபாவளி பரிசு என்ன தெரியுமா ? ” 2 வகை பீர்கள்”. இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா ? இது தான் திராவிட அரசின் சாதனைகளா? தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா ? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ? மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா? என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 538

    0

    0