இது எல்லாம் ரொம்ப ஓவரு… ; வாரிசு பட நிகழ்ச்சியால் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த சிக்கல்!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 11:45 am

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அஜித்குமாரின் துணிவு படத்துடன் மோதுகிறது. இதனால், அஜித், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, இரு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இதில், ஒருபடி மேலே சென்று வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் மாஸான என்ட்ரி கொடுத்தார்.

மேலும், அவரது பேச்சுக்கு விழா அரங்கமே அதிர்ந்து போனது. இந்த விழா அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களை கட்டுப்படுத்த சில மோதல்களும் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழாவின் போது, ரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால், வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக, நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின், தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?