ரூ.210 கோடி வசூலுக்கு வாய்ப்பே இல்ல.. பொய் சொல்லும் வாரிசு படக்குழு ; அடித்துச் சொல்லும் திருப்பூர் சுப்பிரமணியன்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 10:16 am

வாரிசு படம் 210 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தின் தமிழக விநியோகஸ்தர் லலித் வெளியிட்ட அறிவிப்புக்கு, 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படமும் கடந்த 11ம் தேதி ஒரே நாளில் வெளியாகியது. துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வாரிசு படத்தின் கலவையான விமர்சனமே எழுந்தது.

குறிப்பாக, வாரிசு படம் டிவி சீரியல் போல இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், கொதித்துப் போன இயக்குநர் வம்சிபைடிபல்லி, வாரிசு படத்துக்காக தானும், தளபதி விஜய்யும் செய்த தியாகங்கள் என்ன தெரியுமா..? சீரியல்ன்னா கேவலாமா..? டிகிரேடி பண்ணாதீங்க, உங்கள் வீட்டில் போய் பாருங்க உங்க அம்மா, பாட்டி எல்லாம் வீட்டில் பார்க்கிறார்கள், என்று பொங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, இரு முக்கிய நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியானதால், வசூல் ரீதியாக யார் வெற்றியாளர் என்பதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில், வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை பெற்ற லலித் என்பவர் 5 நாட்களில் வாரிச படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்ட நிலையில், இரு தினங்களுக்கு பிறகு 7 நாட்களில் 210 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

விஜய் படத்திற்கு முதல்நாள் வசூல் தான் அதிகமாக இருக்கும். ஆனால், வாரிசு திரைப்படத்தை பொறுத்தவரை 6 மற்றும் 7வது நாளில் இத்தனை கோடி வசூல் செய்திருப்பாக விளம்பரம் வெளியிட்டிருப்பது திரையுலகினரையே பிரமிக்க வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது :- வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பில்லை. லலித் தமிழக உரிமையை மட்டுமே வாங்கியுள்ளார். அதிலும் 5 ஏரியாக்களை ரெட் ஜெயன்ட்டிடம் கொடுத்துள்ளார். வெளிநாட்டு உரிமையை வேறு ஒரவர் வாங்கிச் சென்று விட்டார். அப்படி இருக்க இவருக்கு எப்படி 7 நாட்களில் உலக அளவிலான முழுமையான வசூல் நிலவரம் தெரிய வந்தது?

வாரிசு படம் என்றால் கூட பராவயில்லை, போட்டிக்கு துணிவு படம் வந்து அதுவும் நல்லா போயிட்டு இருக்கு, இவர்கள் சொல்கிற அளவுக்கு எல்லாம் திரையரங்கு வசூல் சாத்தியமில்லை. லலித் இந்த அளவுக்கு வசூல் விளம்பரம் வெளியிட ஒரே காரணம் தான், விஜயின் அடுத்த படத்தை அவர்தான் தயாரிக்கிறார், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 464

    0

    0