வாரிசு ரிலீசுக்காக காத்திருக்கும் படக்குழுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி… முக்கிய பிரபலம் திடீர் உயிரிழப்பு.. கண்ணீரில் திரையுலகம்!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 12:14 pm

வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், அப்படத்தில் முக்கிய பங்காற்றிய பிரபலம் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு மோதுவதால், இரு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பொங்கல் பண்டிகை.

இந்த நிலையில், வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், அப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சுனில் பாபு திடீரென உயிரிழந்திருப்பது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலியிடம் உதவி புரொடக்ஷன் டிசைனராக பயணத்தை தொடங்கிய இவர், மலையாளத்தில் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார்.

அனந்த பத்ரம், பெங்களூரூ டேஸ், காயம்குளம் கொச்சுன்னி, பழசிராஜா, உருமி, சோட்டா மும்பை, பிரேமம், நோட்புக், ஆமி ஆகிய படங்களிலும் வேலை செய்துள்ளார்.

அனந்த பத்ரம் படத்திற்காக சிறந்த கலை இயக்குநர் என்ற கேரள மாநில விருதை பெற்ற சுனில், இந்தியில் எம்எஸ் தோனி, கஜினி, லக்ஷயா, ஸ்பெஷல் 26 உள்ளிட்ட பங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பொங்கலுக்கு வாரிசு வெளியாக உள்ள நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுனில் பாபுவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போன நடிகர் துல்கர் சல்மான், சுனில் பாபுவின் புகைப்படத்தை பகிர்ந்து இதயம் கணக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!