இன்னும் எத்தனை பேர்? மீட்பு வீரர்கள் சொன்ன பகீர் தகவல் “கால் வைக்கவே நடுங்குது”வயநாடு பயங்கரம்…!!

Author: Sudha
31 July 2024, 11:43 am

கேரளா வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.கனமழை நிலச்சரிவுடன் சாளி ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை சூரல்மலை ஆகிய கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

அதிகாலை நேரம் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்டனர்.

நிலச்சரிவில் முண்டக்கை சூரல்மலையை இணைக்கும் பாலம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. உறங்கிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் மாட்டி கொண்டனர்.

இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணுவம்,தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர், பல்வேறு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மீட்பு குழுவினர் குறிப்பிடும் போது இன்னும் எத்தனை உடல்கள் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை.உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மொத்த கிராமமும் மண்ணோடு புதைந்து விட்டது.எங்கு பார்த்தாலும் காட்டாற்று வெள்ளமும் மண்ணும் மட்டுமே தெரிகிறது.இது ஒரு பெரும் துயரம்.

நிலத்தில் கால் வைக்கவே பயமாக இருக்கிறது எங்கு பார்த்தாலும் உடல்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பணிக்காக பலரும் தன்னை முனைப்போடு ஈடுபடுத்திக் கொண்டனர் அதனால்தான் விரைவாக மீட்புப் பணிகளை செய்ய முடிகிறது.இனியும் எத்தனை பேரின் அழுகுரல்களை கேட்க வேண்டி இருக்குமோ? என நினைக்கும் போது பயமாக இருக்கிறது என தெரிவித்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 190

    0

    0