அதிக தொகுதிகளை கேட்கும் விசிக : திமுகவுக்கு புதிய தலைவலி : முதல்வரிடம் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கும் குழு!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2024, 4:53 pm
அதிக தொகுதிகளை கேட்கும் விசிக : திமுகவுக்கு புதிடிய தலைவலி : முதல்வரிடம் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கும் குழு!
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தின. ஏற்கனவே திமுக, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகின்றனர். ஹெச்.ராஜா தலைமையில பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று முதல் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கிறது.
திமுக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை ஒரு புறம் நடத்தி வர மறுபுறம் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழு முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி வரும் 12 ஆம் தேதி திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.