மோடி, அமித்ஷா மோசமான சக்திகள்… 2ம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் ; திருமாவளவன் பிரச்சாரம்…!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 1:03 pm

மோடி அமித் ஷா போன்ற மோசமான சக்திகளிடமிருந்து இந்த நாடு விடுதலை பெறுவதற்கான இரண்டாம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவத்தூர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் முனைவர் தொல் திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஆகியோர் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட காரை, கொளக்காநத்தம், கொளத்தூர், கூத்தூர், ஆதனூர், மேலமாத்தூர் ஆகிய பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: கொச்சையாக பேசி வருகிறார் DRUG உதயநிதி… இனி சும்மா இருக்க மாட்டோம் ; அண்ணாமலை எச்சரிக்கை..!!!

அப்போது, காரைப் பகுதியில் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், காந்தியடிகள் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திரப் போர் நடைபெற்றது. இப்போது அதைவிட மோசமான சக்திகளான மோடி அமித்ஷாவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்கான இரண்டாம் விடுதலைப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல், என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அளவில் மக்களின் எதிரி பாரதிய ஜனதா கட்சி. எனவே, இந்த தேர்தல் அதிமுகவிற்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ எதிரான தேர்தல் அல்ல. மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல்.

மேலும் படிக்க: Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

தமிழ்நாட்டில் 40க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தூக்கி எறிய முடியும். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிப்பீர், என்று கேட்டுக்கொண்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 275

    0

    0