ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி : திருமாவளவன் திடீர் அறிக்கை.. 3 மாத காலம் சஸ்பெண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 10:24 am

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் டெல்லியில் இப்போது பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியா இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், விசிக நிர்வாகிகள் சிலர் அவரை தொடர்பு கொண்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த ஆடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

விசிக பிரமுகர் மணிமாறன் ஆடியோ வைரலானதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விசிக செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு, மணிமாறன் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்று மாத காலத்திற்கு அப்பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

அவர் 15 நாட்களுக்கு பின்னர் கட்சியின் தலைமையகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அணுகி தனது நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!