‘இந்த ஆபிஸ்ல இருந்து வெளிய போ’ : மனுவை நிராகரித்த அரசு பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்.. ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2022, 10:18 am
விழுப்புரம் : தாட்கோ அலுவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிபிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்ககோரி அதிகாரிகயை தகாத வார்த்தையால் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் செயற்பொறியாளராக அன்புதேவகுமாரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு செயற்பொறியாளர் அன்புதேவகுமாரியிடம் நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க கூறி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரியிடம் சேரன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த சேரன் பெண் அதிகாரியை தகாத வார்த்தையால் பேசியதோடு மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். மேலும் விசிக பிரமுகர் என்ன செய்வது என தெரியாமல் செல்போனை எடுத்து மேஜை மீதுள்ள புத்தகம் வீது வேகமாக வீசுகிறார். தகாத வார்த்தைகளால் பெண் அதிகாரி என்றும் பாராமல் வசை பாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுக்குறித்து மேற்கு காவல் நிலையத்தில் தாட்கோ பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சியில் திமுக வினரால் மட்டுமின்றி கூட்டணி கட்சியினராலும் தொல்லை தான் என்பதும் , அதுவும் அரசு துறை அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.