விசிக முக்கிய நிர்வாகிக்கு ED போட்ட ஸ்கெட்ச் ; சென்னையில் 5 இடங்களில் ரெய்டு ; அதிகாலை முதலே பரபரப்பு!!!

Author: Babu Lakshmanan
9 March 2024, 10:08 am

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியின் வீடு உள்பட சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.ஏ புரம், வேப்பேரி, ஈ.சி.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

சென்னையில் வசிக்கும் அரசு ரேஷன் கடைகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!