‘எனக்கு கல்யாண ஆசை வராதா..?’ திருமாவளவன் பேச்சால் சர்ச்சை… வலுக்கும் மாற்றுத்திறனாளிகளின் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 12:56 pm

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் எத்தனையோ திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு திருமண ஆசை இருக்காதா..? நான் என்ன நொண்டியா..? முடமா என்று பேசியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதமாக, திருமாவளவனின் பேச்சு உள்ளதாகக் கூறி அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜம் ஜம் அஷ்ரப் என்பவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் காணொளியில் அஷ்ரப் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண ஆசை வரக்கூடாதா..? சமூக நீதி பேச்சாளராக உள்ள நீங்கள் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில், இப்படி பேசலாமா..? தாங்கள் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை தங்களுக்கு எதிராக நடத்த வேண்டி இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!