விசிக தலைவர் திருமாவளவன் திடீர் மருத்துவமனையில் அனுமதி… மருத்துவர்கள் சொன்ன பரபரப்பு காரணம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 11:34 am

விசிக தலைவர் திருமாவளவன் திடீர் மருத்துவமனையில் அனுமதி… மருத்துவர்கள் சொன்ன பரபரப்பு காரணம்!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொல். திருமாவளவனை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் திருமாவளவனை சந்திக்க வரவேண்டாம் என்று கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் திருமாவளவன் பங்கேற்று இருந்த நிலையில், அவருக்கு நேற்று உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்