வீண் விளம்பரம் செய்யும் விசிக எம்பி…எப்போதுமே எம்ஜி ஆர் தான் G.O.A.T : ஜெயக்குமார் தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 4:00 pm

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகவளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை எதிர்பார்க்காமல், தமிழக அரசு தேவையான நிதியை செலவழித்து விட்டு பின்னர் மத்திய அரசிடம் நிதியை பெற்றுக் கொள்வது தான் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும்.

ஆனால் மத்திய அரசை குறை சொல்லி நிதி இல்லை என்று சொல்லுவது ஏற்புடையது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று வெளியாக உள்ள விஜயின் போர்ட் திரைப்படம் 2000 ரூபாய் வரையில் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் தவறி இருப்பது அவர்களது இயலாமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் தந்தையின் புகழை பாடுவதற்கு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை கல்லூரிகளுக்கு சென்று படிக்காமலேயே பட்டம் பெரும் நிலையை விடியா திமுக ஆட்சியில் உருவாகி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக வெளி மாநில மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும், தமிழக மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் பெற்றுக்கொண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்புக்கான சான்றிதழை பெரும் நிலை தமிழக அரசின் உருவாகி இருப்பதாகவும், இவற்றை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த திமுக அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார் .

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படுகிறார், இல்லை உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார் என்பதே தெரியாமல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோட் திரைப்படம் எந்த வகையில் சனாதனத்தை பிரதிபலிக்கிறது என்பதை விசிக எம்.பி. ரவிக்குமார் விளக்க வேண்டும். The Greatest of all time என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்… அதனால் வீண் விளம்பரத்திற்காக ரவிக்குமார் பதிவிடாமல் எதற்காக இதை பதிவிட்டார் என்பதை விளக்கினால் நாங்கள் பதில் அளிக்க தயார்

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 180

    0

    0