அதிமுகவை மிரட்டும் பாமக… திமுக – விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி ; பதறும் திருமாவளவன்!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 12:57 pm

திமுக கூட்டணி 2019லிருந்து வலுவாக உள்ளதாகவும், திமுக – விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வு துறை மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியே தொடர வேண்டும் என்பதற்கான வெற்றியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் இது முதல்வருக்கு கிடைத்த அங்கீகாரம்.

அதிமுக கூட்டணி என்பது சிதறி போனது, அவர்களுக்கு இடையில் எந்த நம்பக தன்மையும் இல்லை. முதலில் அதை பலவீனப்படுத்தியது பாமக, இரண்டாவது அதிமுக உட்கட்சி குழப்பம். அடுத்து எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என குழம்பிய பாஜகவின் நிலைபாடு தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணியை அரவணைத்து செல்ல கூடிய ஆளுமை தமிழக பாஜகவில் இல்லை. இந்த காரணங்கள் தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம்.

திமுக கூட்டணி 2019 லிருந்து வலுவாக உள்ளது. ஆனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். விடுதலை சிறுத்தை கூட்டணியில் இருந்து வெளியேற போகிறது என பாஜக தலைவர் உட்பட சிலர் பேசிக்கொண்டு உள்ளனர். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டி காட்டுகிறோம். ஆனால் எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக தெளிவாக உள்ளோம். அகில இந்திய அளவில் திமுக கூட்டணி வலிமை பெற வேண்டும் என்பது எங்கள் நிலைபாடு. அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைக்க கூடிய சக்திகளை இந்த கூட்டணி பெறும்.

பாமக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகி நாங்கள் இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து உள்ளோம். திமுக உடனும் பேசுவோம், அதிமுக உடனும் பேசுவோம். திமுக உடனும் எங்களுக்கு பேச முடியும் என அதிமுகவை மிரட்டுவது, அதிமுக உடன் பேச முடியும் என திமுகவை மிரட்டுவது என இப்படித்தான் பாமக தேர்தல் கூட்டணி யுத்திகளை கடந்த காலங்களில் கையாண்டு உள்ளது. எனவே, பாமக திமுக கூட்டணியில் வந்துவிடும் என்பது எல்லாம் யூகம், என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ