மொத்தத்தையும் சுருட்டி வீசிய சூறைக்காற்று… வேலூரில் திடீரென வீசிய புயல்… வெதர்மேன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 9:48 am

வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்த சூழலில், நேற்று பிற்பகலில் வழக்கத்திற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் லேசான மழை தொடங்கியது. பின்னர், படிப்படியாக சூறைக்காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூரைகளே பறந்து போகும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.

வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வள்ளலார் பெருமுகை, வசூர், பிள்ளையார் குப்பம் கொணவட்டம், காட்பாடி பிரம்மபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பல்வேறு இடங்களில் புயல் காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.

குறிப்பாக, VIT கல்லூரியில் இரும்பு மேசைகள் பறந்தன. மாணவர்களே நிலைகுலைந்து போகும் அளவுக்கு காற்று வீசியதால் அனைவரும் பீதியடைந்தனர். வேலூரில் வீசிய சூறைக்காற்றின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2570

    0

    0