பிரித்தாளும் அரசியலை செய்யும் திமுக… அம்பலப்படுத்தாமல் ஓயமாட்டேன் ; வேலூரில் பிரதமர் மோடி சபதம்

Author: Babu Lakshmanan
10 April 2024, 12:09 pm

மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் பொதுக்கூட்டத்தல் பங்கேற்ற பிரதமர் மோடி பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருகை புரிந்தார். அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் பொன்னாடை போர்த்தி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வரவேற்றனர்.

மேலும் படிக்க: அதிமுக ஆட்சி மட்டும் அமையட்டும்… அக்குவேறு ஆணிவேராக அலசுவோம் ; திமுகவுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

பின்னர், வேலூர் வேட்பாளர் ஏசி சண்மும், அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு, தருமபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி, திருவண்ணாமலை வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி வேட்பாளர் கணேஷ்குமார், கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மன் ஆகியோர ஆதரித்து வாக்குசேகரித்தார்.

மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது :- தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தத்தை படைக்கப்போகிறது என்பதை டெல்லியில் உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் ஆசிர்வாதம் என்றும் எப்போதும் எனக்கு உண்டு ; தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர். இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரர், கடவுள் முருகன் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிக்கையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.

மேலும் படிக்க: கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!!

இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா இருக்கிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது. வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரூ தொழில்துறை வழித்தடம், வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால், வேலூர் வளர்கிறது.

குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை எதிர்ப்பது ஆகியவையே திமுகவின் முதன்மையான நோக்கம். மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்தி கொள்கிறது. போதை மாஃபியாக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவன் எந்த குடும்பத்துடன், யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள். நாட்டின் எதிர்காலமான பள்ளிக்குழந்தைகள் கூட தமிழ்நாட்டில் போதை மருந்துகளுக்கு அடிமையாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு ரூ.4,300 கோடி இழப்பு ஏற்படுத்தும் அளவுக்கு மணல் கொள்ளை நடக்கிறது.

சாதி, மதம், மொழி ரீதியில் தமிழ்நாட்டு மக்களிடம் பிரிவினையை திமுக ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாக்காசாகி விடும் என்பதால் பிரித்தாளும் அரசியலை திமுக செய்கிறது. திமுகவின் பிரித்தாளும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓய மாட்டேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக பெரும் தடையாக இருக்கிறது ; அனைத்திலும் திமுக அரசியல் செய்கிறது. திமுக ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழக இளைஞர்களின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. ஒட்டுமொத்த திமுகவும், ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக அரசும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் கண்ணில் மண்ணை தூவி கச்சத்தீவை, திமுகவும், காங்கிரசும் இலங்கைக்கு தாரைவார்த்து விட்டன. நாடு முழுவதும் காங்கிரஸ், திமுகவின் போலி முகம் குறித்த விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது, என தெரிவித்தார்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…