ஹரி வைரவன் மறைவை தொடர்ந்து மற்றுமொரு அதிர்ச்சி.. வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் உயிரிழப்பு ; திரையுலகினர் அதிர்ச்சி!

Author: Babu Lakshmanan
24 December 2022, 9:07 am

2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் விஷ்ணு விஷாலுக்கும், சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர்களுக்கு நண்பர்களாக நடித்த அப்புகுட்டி, நிதிஷ் போன்ற பலரும் சிறு சிறு கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன். இவர் குள்ளநரி கூட்டம் படத்திலும் விஷ்ணு விஷால் உடன் நடித்திருந்தார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஹரி வைரவன் அண்மையில் காலமானார்.

hari vairavan - updatenews360

ஹரி வைரவன் உயிரிழந்து சில தினங்களே ஆன நிலையில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த மற்றொரு நடிகர் இன்று உயிரிழந்திருப்பது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி