முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு… தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Author: Babu Lakshmanan
8 July 2022, 9:06 am

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுகளில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கீ.வீரமணி, கே.சி. கருப்பணன், ராஜேந்திர பாலாஜி என பல அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு விட்டது.

இது திமுகவின் பழிவாங்கும் செயல் என்று அதிமுக தலைமை ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

Minister Kamaraj-Updatenews360

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?