அதிரடி காட்டி வரும் அமலாக்கத்துறை; அடிக்கடி நடக்கும் சோதனைகள்; முன்னணி தயாரிப்பாளர் வீட்டில் ஏன்?,…
Author: Sudha30 July 2024, 9:47 am
அமலாக்கத்துறை தற்போது பெரும்புள்ளிகளின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது.சென்னை அசோக் நகரில் உள்ளது திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு Libra Productions Pvt Ltd நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மை என நம்ப வைத்து பாலாஜி கபா என்பவரிடம் 16 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு Power Project திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
பிறகு இரண்டு வாரங்களில் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தணை வெளியிட்டு ஜாமீன் அளிக்கப் பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.