தம்பி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி? தனி ஆளாக இருக்கும் எனக்கு ஆதரவு தர வேண்டும் : சீமான் விருப்பம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 12:56 pm

சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது நாம் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் அன்புமகன் இதழியல் உலகில் ஒரு வேந்தனாக உள்ளார்.

விளையாட்டு துறையில் உள்ள ஆர்வத்தால் ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்து எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை அவரை சாரும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் சீமான் பதிலளித்தார்.

நடிகர் விஜய் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்த அவரது இயக்கத்திற்கு உத்தரவிட்டதை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், மாற்று என்பதில் இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி; அந்த கட்சியை விட்டால் இந்த கட்சி என்று அரை நூற்றாண்டுகளை இந்த நிலம் கடந்து விட்டது. தம்பி விஜய் எல்லாம் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும்.

நம்ம ஒரு ஆளே எதிர்த்து சண்டை செய்ய முடியவில்லை. அதற்கு இதெல்லாம் ஒரு முயற்சி, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதால் இதையெல்லாம் செய்கிறார்.

நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை; தம்பி விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் ஒரு தனித்த பேரியக்கம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் ஆட்சி மாற்றம் ஆள் மாற்றத்தை விரும்பவில்லை, அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம்.

இதை எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய முடியாது; எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் உடன் இணைந்து பயணிக்கலாம் என அவர் கூறினார்.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!