கட்சி பாடலை வெளியிட்ட போது கண்கலங்கிய விஜய் : கொடி அறிமுக விழாவில் நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 10:27 am

சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன்.

அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.* தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்.

தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம் நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!