விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது ; NDA கூட்டணியில் தேமுதிகவா…? பாஜக போடும் தேர்தல் கணக்கு…!!
Author: Babu Lakshmanan26 January 2024, 10:00 am
குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் விருதுகளை வழங்கி கவிரவிக்க உள்ளார்.
இந்த நிலையில், கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
பத்ம விபூஷன் விருதுகள் வென்றவர்களின் விபரம்
திருமதி வைஜெயந்திமாலா பாலி – கலை – தமிழ்நாடு
ஸ்ரீ கொனிடேலா சிரஞ்சீவி – கலை – ஆந்திரப் பிரதேசம்
ஸ்ரீ எம் வெங்கையா நாயுடு – பொது விவகாரங்கள் – ஆந்திரப் பிரதேசம்
ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப் பின்) – சமூகப் பணி – பீகார்
திருமதி பத்மா சுப்ரமணியம் – கலை – தமிழ்நாடு
பத்ம பூஷன் விருதுகள் வென்றவர்களின் விபரம்;
ஸ்ரீ விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) – கலை – தமிழ்நாடு
ஸ்ரீ ஹோர்முஸ்ஜி என் காமா இலக்கியம் மற்றும் – கல்வி – பத்திரிகை மகாராஷ்டிரா
ஸ்ரீ மிதுன் சக்ரவர்த்தி – கலை – மேற்கு வங்காளம்
ஸ்ரீ சீதாராம் ஜிண்டால் – வர்த்தகம் மற்றும் தொழில் – கர்நாடகா
ஸ்ரீ யங் லியு – வர்த்தகம் மற்றும் தொழில் – தைவான்
ஸ்ரீ அஷ்வின் பாலசந்த். – மருத்துவம் – மகாராஷ்டிரா
ஸ்ரீ ராம் நாயக் பொது – விவகாரங்கள் – மகாராஷ்டிரா
ஸ்ரீ தேஜஸ் மதுசூதன் படேல் – மருத்துவம் – குஜராத்
ஸ்ரீ ஓலஞ்சேரி ராஜகோபால் – பொது விவகாரங்கள் – கேரளா
ஸ்ரீ தத்தாத்ரே அம்பாதாஸ் மாயலூ அல்லது ராஜ்தத் – கலை – மஹாராஷ்டிரா
ஸ்ரீ டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை – ஆன்மிகம் – லடாக்
ஸ்ரீ பியாரேலால் சர்மா – கலை – மகாராஷ்டிரா
ஸ்ரீ சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் – மருத்துவம் – பீகார்
திருமதி உஷா உதுப் – கலை – மேற்கு வங்காளம்
திருமதி எம் பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்) – பொது விவகாரங்கள் – கேரளா
ஸ்ரீ குந்தன் வியாஸ் இலக்கியம் மற்றும் கல்வி – பத்திரிகை – மகாராஷ்டிரா
மறைந்த விஜயகாந்த் மத்திய அரசின் விருது பெற முழுத் தகுதியானவராக இருந்த போதிலும், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், பிற கூட்டணி கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.
எனவே, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, மறைந்த விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசினார். மேலும், நல்ல நண்பர் என்று தனது X தளப்பக்கத்திலும் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, இந்த விருதின் மூலம் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.