திரையில் மட்டுமல்ல விஜயகாந்த் அரசியலிலும் கேப்டன்தான் : திருச்சி வந்த பிரதமர் மோடி புகழஞ்சலி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 2:46 pm

திரையில் மட்டுமல்ல விஜயகாந்த் அரசியலிலும் கேப்டன்தான் : திருச்சி வந்த பிரதமர் மோடி புகழஞ்சலி!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்களும் தங்கள் அஞ்சலியை நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் செலுத்தினர்.

டிசம்பர் 29ஆம் தேதி லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடி விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமானோர் ஒன்று திரண்டு இன்று வரை அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் விஜயகாந்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு அதிக வலிகளை தந்த ஆண்டாக உள்ளது. மாநில அரசுடன் மத்திய அரசு என்றும் துணை நிற்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இழந்துள்ளோம். அவர் திரையில் மட்டும் கேப்டன் அல்ல. அரசியலிலும் கேப்டன் தான். தனது திரைப்படங்கள் வாயிலாக மக்களின் இதயங்களை வென்றவர் கேப்டன் விஜயகாந்த்.

விஜயகாந்த் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுபவர். விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரின் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 481

    0

    0