#ஶ்ரீமதிக்குநீதிவேண்டும்.. மாணவி மர்ம மரணம்… மெத்தனமாக செயல்படும் காவல்துறைக்கு விஜயகாந்த் கண்டனம்..!!
Author: Babu Lakshmanan16 July 2022, 6:16 pm
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியின் தங்கி, கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி பயின்று வந்தார்.
இவர், நேற்று முன் தினம் அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் மர்ம மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என கூறி வருகின்றனர்.
மாணவியின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன..? சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சிறுமியின் உறவினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அவர் எப்படி இறந்தார் வேண்டும். மேலும் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிய மாணவியின் சாவிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும், என தெரிவித்துள்ளார்.