இரவோடு இரவாக விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. நள்ளிரவில் நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2023, 8:47 am

இரவோடு இரவாக விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.. நள்ளிரவில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். ஏழை மக்களுக்கு வாரி வழங்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார்.

அரசியலில் நுழைந்து தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து, வந்த வேகத்திலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார். இந்த நிலையில் அவ்வப்போது அவருக்கு மருத்துமவனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்றார்.

பின்னர் பூரண குணமடைந்த பிறகு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில் டிசம்பர் 14ல் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!