விஜயகாந்த் உடல் வேறு இடத்திற்கு மாற்றம் : இறுதிச்சடங்கு குறித்து தேமுதிக முக்கிய அறிவிப்பு!!
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிகவின் நிறுவன தலைவரான இவர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் ஏராளமானவர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கூடி வருகின்றனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல தேமுதிக அலுவலகத்தில் கூட்டம் என்பது அதிகரித்து வருகிறது. அதிகளவில் மக்கள் கூட அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து அங்கு வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகம் எடுத்து வரப்பட உள்ளது. இதையடுத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.