விளவங்கோடு தொகுதிக்கு விடுதலை.. விஜயதாரணி விலகல் : இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 10:04 pm

விளவங்கோடு தொகுதிக்கு விடுதலை.. விஜயதாரணி விலகல் : இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி.

இவர் கடந்த சில தினங்களாகவே பாரதிய ஜனதாவில் சேர்வதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இதற்கு விஜய தரணி தரப்பில் முழுமையான மறுப்பு வெளியிடப்படவில்லை தான் டெல்லியில் ஒரு வழக்கு விஷயமாக வந்திருப்பதாக மட்டுமே கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகன் முன்னிலையில் விஜயதாரணி எம்எல்ஏ இன்று பாரதிய கட்சியில் இணைந்தார்.

விஜய தரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விஜயதாரணியின் உருவப்படத்தை எரித்தும் இவர் உடனடியாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் தலைமையில் காங்கிரஸார் விஜய் திராணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 992

    0

    0