விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தொடங்கிய வாக்கு எண்ணிக்கை; வெற்றி யாருக்கு?

Author: Sudha
13 July 2024, 8:52 am

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2021 நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம் எல் ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது.

இத்தேர்தலில் 2.37 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் எஸ்.பி. தீபக் ஸ்வாட்ச் தலைமையில், 4 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 1,219 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னிலை நிலவரம் காலை 11 மணிமுதல் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!