விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… அதிகாரியை மாத்துங்க : தட்டிக்கேட்டா திமுகவினர் தாக்குகிறார்கள்.. அன்புமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 4:53 pm

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். விக்கிரவாண்டியில் அப்பட்டமான விதிமீறல்கள் நடப்பதால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்

விக்கிரவாண்டியில் இறந்தவர்கள் 15,000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம் வருவது விதிமீறலாகும். திமுகவின் விதிமீறல்களை தட்டிக்கேட்ட அதிமுக மற்றும் பாமகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விதிமீறல்கள், வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விடுகிறது. திமுகவினரின் விதிமீறல்கள் மீது தேர்தல் அதிகாரி சந்திரசேகர் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரி சந்திரசேகரால் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.

திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து பாமக சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…