அரசு அதிகாரிகளுடன் நிலத்தை அபகரிக்க முயன்ற திமுக கவுன்சிலர்… நீதிமன்றம் வரை சென்றதால் நில உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்..!!

Author: Babu Lakshmanan
29 June 2022, 7:41 pm
Quick Share

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டா மாற்றம் செய்ய நீதிமன்றம் வரை சென்றவருக்கு பட்டா கிடைக்கவிடாமல், நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும் படி,திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் நிலத்தின் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கனகராசு. இவர் அதே ஊரை சேர்ந்த பட்டாம்மாள் என்பவரிடம் கடந்த 1983ம் ஆண்டு 36 செண்ட் நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். மேலும், அந்த இடத்தில் 25 ஆண்டுகளாக டீ கடை வைத்தும், வசித்தும் வருகிறார். மேலும், இந்த நிலத்திற்கு பட்டா பெறும் முயற்சியிலும் கனகராசு ஈடுப்பட்டு வருகிறார்.

ஆனால், திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அந்த நிலத்திற்கு பட்டா வழங்க விடாமல், அதிகாரிகளோடு கைக்கோர்த்து தங்களை அலைக்கழிப்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளார் கனகராஜ். அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீது விசாரணை மேற்கொண்டு 12 வாரங்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தனது ஆதரவாளர்களோடு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விக்கிரவாண்டி வட்டாச்சியர் இளவரசன் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு கனகராஜின் கடையை இடிக்க முயன்றுள்ளார். இதனை தடுத்த கனகராஜ் குடும்பத்தாரை ஜெயச்சந்திரன் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஆளும் கட்சியினர் என்பதால் பட்டா வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும் பட்டா வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர், வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு சாதமாக நடந்துக்கொள்வதாகவும், நிலத்தை தனக்கு எழுதிக்கொடுக்கும் படி திமுக மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தினம் தோறும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட கனகராசு தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுடைய வாழ்வாதாரமான கடையை அபகரிக்கும் முனைப்போடு ஜெயச்சந்திரன் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கு பாதுக்காப்பு அளிக்கவும், தங்களுக்கான நிலத்திற்கு நீதிமன்ற ஆணைப்படி உரிய விசாரணை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் குடும்பத்துடன் மனு அளித்தனர்.

திமுக ஆட்சியில் நில அபகரிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தவர் நிலத்தை அபகரிக்க மாவட்ட கவுன்சிலர் எந்த அளவிற்கு இறங்கியுள்ளார் என்பதை பார்க்கும் போது, திமுக ஆட்சியின் மீதமுள்ள நாட்களை எப்படி ஓட்டுவது என மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுவிட்டுள்ளதாக எதிர்கட்சியினர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 921

    0

    0