தமிழகத்தை அதிர வைத்த கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் அடுத்தடுத்து பலி ; உடனே புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
15 May 2023, 11:54 am

விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

விழுப்புரம் – மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் குடித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுவரையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சிறப்பு நடவடிக்கையை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 லிட்டர் கள்ளச்சாராயமும் 428 மதுபான பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர் இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 569

    0

    0