பட்டியலின இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்… திமுக பிரமுகர் உள்பட 3 பேர் அராஜகம்… போராடியவர்கள் மீது தடியடி ; நீலம் பண்பாட்டு மையம் கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
3 February 2024, 4:42 pm

விழுப்புரம் மரக்காணம் நடுக்குப்பம் சேர்ந்த பட்டியல் சமூகத்து இளைஞர்கள் மீது சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் நடுகுப்பம் கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பட்டியல் சமூகம் சாதிய தீண்டாமைக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சாதிவெறியர்களின் தொடர் அட்டூழியம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நடுகுப்பம் பகுதியில் உள்ள பிற சமூகத்தை சேர்ந்த 3 சாதிவெறியர்கள் மதுபோதையில் காரை ஒட்டி வந்துள்ளனர்.

https://twitter.com/Neelam_Culture/status/1752907812186009762

அப்போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதே வழியில் செல்லும்போது சாதி திமிராக பேசி காரை அவர்கள் மீது மோதிய போது கீழே விழுந்துள்ளனர். பிறகு முன்று முறை இவர்கள் காரை இளைஞர்கள் மீது ஏற்றி கொடூரமான முறையில் கொலை முயற்சி தாக்குதல் நடத்தினர். இதில், கீர்த்திகாசன், அருண், அதிதீரன், அனீஷ்குமார் ஆகியோர் கால் முறிவு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய ராஜ.மாரிமுத்து, திமுக பிரமுகர் ஐயப்பன், சுகு ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர், காவல்துறை விரைந்து இந்த மூன்று சாதிவெறிப் பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், மரக்காணம் நடுக்குப்பம் கிராமத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளான இளைஞர்களுக்கு நீதி வழங்கிட கோரியும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் போராட்டம் நடத்திய பட்டியல் மக்கள் மீது தடியடி நடத்திய மரக்காணம் காவல்துறை மனித உரிமை மீறல்கள் செய்துள்ளது. யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது?, எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 659

    0

    0