அட சூப்பரா இருக்கே-ப்பா… மைதானத்தில் இளம் வீரருடன் குத்தாட்டம் போட்ட கோலி : வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 4:05 pm

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் வீரருடன் மைதானத்தில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 4 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்தப் போட்டியின் போது ஈடன் கார்டன் மைதானத்தில் லேசர் லைட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இந்திய இளம் வீரரான இஷான் கிஷானுடன் விராட் கோலி குத்தாட்டம் போட்டுள்ளார்.

இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!