தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!

Author:
9 November 2024, 12:02 pm

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் விட்டுச் சென்ற பேட்டிங் பாரம்பரியத்தை அடுத்து முன்னெடுத்து வந்தவராக இருந்த வருகிறார் விராட் கோலி. இந்தியா கிரிக்கெட் வீரரான விராட் கோலி டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Virat Kohli - Updatenews360

இருந்தாலும் கடந்த சில காலங்களாக ரன் மெஷினாக இருந்து வந்த விராட் கோலி பின்னர் ரன் குவிக்க தடுமாறி வருவதோடு மட்டுமே இல்லாமல் பல விக்கட்டுகளையும் இழந்து ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார் .

ஆனாலும், மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் அதே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறார் .

தற்போது 36 வயதை எட்டி இருக்கும் விராட் கோலி கிரிக்கெட்டை தாண்டி தொடர்ந்து தன்னுடைய மனைவி, குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி அவ்வப்போது அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது மனைவியை அனுஷ்காவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி அங்கு இருந்த அவரது தீவிர ரசிகையான ஒரு பெண் ஒருவர் விராட் கோலியின் கையை இழுத்து பிடித்து செல்பி கேட்டிருக்கிறார் .

virat kohli

நெருக்கமாக கையை இழுத்து பிடித்துக் கொண்டு செல்பி கேட்ட அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்தப் பெண் சில நிமிடம் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என விராட் கோலியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவரை விடாமல் போஸ் கொடுக்க விராட் கோலி என்னுடைய மனைவி அங்கே சென்றுவிட்டார். கையை விடுங்கள் என்றும் கூறியும் அவர் விடாமல் போட்டோ எடுத்துக்கொண்டே பிறகே விலகி வந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ்…. இது என்னடா விராட் கோலிக்கு வந்த சோதனை? என்றெல்லாம் விமர்சித்து கலாய்த்து வருகிறார்கள். சில பேர் ஆன்ட்டி ஆன்ட்டி என்னோட கைய விடுங்க என்னோட பொண்டாட்டி என்ன திட்டுவா விடுங்க என விராட் கோலி வம்படியாக கையெழுத்து விட்டு போகும் படியான மீம்ஸ் எல்லாம் கிரியேட் செய்து போட்டு இந்த வீடியோவை கிண்டல் அடித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!