விருதுநகர் : விருதுநகரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்தில் நீதி வேண்டி பாஜக நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விருதுநகர் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி என்னும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து துன்புறுத்தியதால் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றமற்றவர் என்று காவல்துறையினர் விடுதலை செய்த பின்னும், ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் சகோதரர் தங்கப்பாண்டியை காவல்துறை கைது செய்ததாக தெரிகிறது.
இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சகோதரர் தங்கப்பாண்டி இறப்புக்கு காரணமான அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தர திமுக ௮ரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சகோதரர் தங்கப்பாண்டியனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 லட்ச ரூபாய் இழப்பீடாகவும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை.
காவல்துறையினரின் தொடர் அத்துமீறலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக சகோதரர் தங்கப்பாண்டியின் இறப்புக்கு நீதி கேட்டு, மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து,
நாளை தமிழக பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
This website uses cookies.