சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? கையில் கட்டுடன் கோர்ட்டில் ஆஜரானதால் பரபரப்பு.. VIDEO!
யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தேனியில் இவரைப் பிடித்த போது கஞ்சா வைத்து இருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அத தொடர்ச்சியாக திருச்சி போலீஸார் பதிவு செய்திருந்த அவதூறு வழக்கு தொடர்பாக,திருச்சி போலீஸார் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (மே 8) மீண்டும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் பதிவான கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தனிப்படை போலீஸார் இன்று (மே 8) காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை மதுரைக்கு அழைத்துச் சென்றனர். மதியம் 1 மணிக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கையில் கட்டுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கை முறிந்த நிலையில் கட்டு போட்டுள்ளதால் சந்தேகம் வலுக்கிறது.
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை என சமீபத்தில் சிறைத்துறை ஏடிஜிபி விளக்கம் அளித்திருந்த நிலையில் இது குறித்து மீண்டும் விளக்கம் அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.