அமெரிக்க அதிபர் தேர்தல்; ஜோ பைடன் விலக வேண்டும்; முன்னாள் அதிபர் ஒபாமா,..
Author: Sudha19 July 2024, 8:49 am
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளது.இதற்கிடையில் ஜோ பைடன் தேர்தலில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பைடனின் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்து விட்டதாக ஒபாமா நம்புவதாகவும், மேலும் 81 வயதான அவர் “அவரது வேட்புமனுவின் நம்பகத்தன்மையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என்றும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது,
2009 முதல் 2017 வரை பைடன் துணை அதிபராக இருந்தபோது பதவியில் இருந்த ஒபாமாவிடம் இருந்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவும் அவரை விட பைடன் ஜனநாயகக் கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான தாக்குதலுக்கு பிறகு அவருக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளதால் பைடனை வெளியேறுமாறு ஒபாமா சொல்லி உள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கடற்கரை வீட்டில் கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பைடன், தனது வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு தேர்தலில் இருந்து விலக வேண்டும் என ஒபாமா கருத்து தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.