வயநாடு நிலச்சரிவு.. தமிழக பாஜக எடுத்த முக்கிய முடிவு : அண்ணாமலை போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 1:41 pm

வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லபட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு சார்ந்த மீட்பு பணிகளில் உதவ தமிழக பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

நிவாரண பணி தடையில்லாமல் நடைப்பெற மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தரப்படும். தமிழ்நாடு பாஜக சார்பில் நிவாரண பொருட்களை வயநாடு மக்களுக்கு தர 5 நபர் கொண்ட குழு திரு ஏ.பி முருகானந்தம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஈரோடு தென் மாவட்ட அமைச்சர் திரு. வேதானந்தன் , திருப்பூர் மேற்கு மாவட்ட அமைச்சர் திரு செந்தில்வேல், நீலகிரி மாவட்ட அமைச்சர் திரு மோகன்ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 326

    0

    0