அண்ணாமலை கையால் மாட்டுக்கறி விருந்து கொடுத்தால் நாங்கள் சாப்பிட தயார் : ஈவிகேஎஸ் கிடுக்குப்பிடி!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 3:57 pm

ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்.

இல்லாவிட்டால் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன்.

எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி தி.மு.க.வும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: 22 பேருக்கு மட்டும் கடவுள் என சொல்லிக் கொள்ளும் மோடி வேலை செய்கிறாரா? ராகுல் காந்தி விமர்சனம்!

இதற்கு பதிலளித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:- என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.

அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சி கறி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம்.

நீங்கள் தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தை தாருங்கள். பரவாயில்லை, வாங்கி கொள்கிறோம்.

நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்